Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
பிறந்தநாள் விழாவில் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவர் அணி மாநில செயலாளர் எழிலன் திராவிட கழக துணை பொது செயலாளர் மதிவதனி உள்ளிட்டோர்
சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் பேசி வந்தனர்.சிறப்பு அழைப்பாளராக வந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.அரை மணி நேரம் நீடித்த மின்வெட்டால் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களும் நிர்வாகிகளும் அவதிக்கு உள்ளானார்கள்.

மின்வெட்டு ஏற்பட்டதை கண்டித்து போனில் டார்ச் லைட் அடித்து தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பி பிறந்தநாள் பொதுக் கூட்டத்தை போராட்டமாக மாற்றினர்.
நான் சொல்ல வேண்டியதை எல்லாம் இங்கு முழக்கமாக செய்து விட்டீர்கள் பொதுக் கூட்டத்தையே கண்டன ஆர்ப்பாட்டமாகவும் நிர்வாகிகள் மாற்றிவிட்டனர். நாங்கள் பேசும் போது எந்த
உணர்வை எழுப்ப வேண்டும் என நினைத்தமோ அந்த உணர்வை நீங்களே கோஷமாக எழுப்பி விட்டீர்கள் என மின்வெட்டுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved