Also Watch
Read this
By: Manigandan Raja

சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனியார் அமைப்பு சார்பில் இயற்கை வேளாண் மரபுத் திருவிழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் கலந்து கொண்டு அரங்குகளை பார்வையிட்டார்.
அப்போது கடலை உருண்டையை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நிர்வாகி ஒருவர் கேட்டபோது நான் வாங்கியது ஒன்றுதான் என நகைச்சுவையாக பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சுரக்காய் குடுவையை கண்டதும் இதில் தான் நான் சிறுவயதில் நீச்சல் கற்றுக் கொண்டேன். என பேசினார்
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் பார்த்திபன் :
சிறு குழந்தைகளுக்கும் தேர்தல் என்றால் தெரிகிறது என்றால் அதற்கு காரணம் தமிழக முதலமைச்சர் விஜய் தான் என்றும், தமிழக முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் இயற்கை வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து சிறு குழந்தைகளுக்கு கூட டாக்டர் அம்பேத்கர் யார் என்று கேட்கிறார்கள் என்றால் அதற்கு தமிழக முதலமைச்சர் விஜய் தான்.டாக்டர் அம்பேத்கரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் தமிழக முதலமைச்சர்தான், மேலும் எனது தந்தையோ உறவினர்களோ அரசியலில் இருந்திருந்தால் எனக்கு எதுவும் தெரிந்திருக்காது ஆனால் நான் உங்களிலிருந்து வந்தவன், ரசிகர்
மன்றம், மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகம் என என் ரசிகர் மன்ற தம்பிகள் போட்ட பிச்சையில் தான் நான் இங்கு வந்து பேசுகிறேன், என் தம்பிகள் இல்லையென்றால் நான் இல்லை என நெகிழ்ந்து பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்ற போது செய்தியாளர்களை கண்டதும் தற்போது எதுவும் பேச முடியாது, அதற்கான நேரம் வரும்போது பேசுகிறேன் என நிற்காமல் சென்றார் அப்போது இரண்டு வார்த்தை மட்டும் பேசுங்கள் என செய்தியாளர் கேட்டதற்கு நன்றி வணக்கம் என தெரிவித்து சென்றார் அமைச்சர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved