Also Watch
Read this
By: Web Team

வால்பாறையில், உயர்கல்வித்துறை சார்பாக அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில், மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பாக, ஆண்டுதோறும் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான திருவிழாவில், மாணவ, மாணவிகள் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் சின்னத்திரை புகழ் இருதயராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தாரை, தப்பாட்டத்தில் தொடங்கி, உடைந்த பொருட்களில் இசை வாசிப்பு, என பல்வேறு நிகழ்வுகளை செய்து காட்டி, மாணவர்கள் கை தட்டல்களை பெற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved