Also Watch
Read this
By: Web Team

பருத்தி சாகுபடியில் மிகப்பெரிய இழப்பை சந்தித்த திருவாரூர் விவசாயிகள், அவற்றை மன வேதனையுடன் தீயிட்டுக் கொளுத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.
பருத்தி விதை விதைத்த நிலையில், தொடர்ந்து பத்து நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பருத்தி விதைகள் முளைக்காமல் போனது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பருத்தி விதைகள் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர். குறிப்பாக பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் பருத்தி பாதிக்கப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து பருத்தி பயிர்களுக்கு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்தனர்.

பயிர்க் காப்பீடு செய்த நிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் தனியார் குடோன்களில் பருத்தி குறைந்த விலைக்கே கொள்முதல் செய்த காரணத்தினால், விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். மேலும், பருத்தி சாகுபடி செய்வதால் எந்தவித லாபமும் இல்லை என்ற காரணத்தினால் மன்னார்குடி அருகே மழவராயநல்லூர், திருவண்டாதுரை, ஆலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தியை தீயிட்டு கொளுத்தினர்.
தமிழக அரசு உடனடியாக பருத்திக்கான காப்பீட்டை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved