வேத மந்திரங்கள் ஒத கெட்டிமேளம் ஒலிக்க தஞ்சை பெண்ணுக்கு தாலி கட்டினார் லண்டன் மாப்பிள்ளை. பின்னர் அம்மி மிதித்து அக்னியை வலம் வந்த தம்பதிகளுக்கு உற்றார், உறவினர்கள் அட்சதை தூவி ஆசி வழங்கினார்கள்.மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநா!தஞ்சை தீர்க்க சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் லண்டனை சேர்ந்த அலெக்ஸாண்டருக்கும், தஞ்சையை சேர்ந்த மோனிகாவுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. மேல்படிப்பிற்கு தஞ்சையில் இருந்து லண்டன் சென்ற மோனிகாவுக்கு அங்கு வசிக்கும் அலெக்ஸாண்டருடன் நட்பு மலர்ந்து ஒரு கட்டத்தில் காதலாக மாறியது.நான்கு ஆண்டுகால காதல் நான்கு ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் தங்கள் காதல் குறித்து பெற்றோரிடம் கூறி உள்ளனர். இதனை தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் இன்று உற்றார் உறவினர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.நாடு, இனம், மதம், மொழி கடந்து...நாடு, இனம், மதம், மொழி என அனைத்தையும் கடந்து வேத மந்திரங்கள் ஓத, கெட்டிமேளம் கொட்டிட மணப்பெண் மோனிகாவின் கழுத்தில் தாலி கட்டினார் மாப்பிள்ளை அலெக்ஸாண்டர்.அம்மி மிதித்து அக்னியை வலம் வந்து...தமிழ் கலாச்சார முறைப்படி அம்மி மிதித்து அக்னியை வலம் வந்து, அக்னி ஹோமத்தில் நெல்பொரி போட்டு கைக்கூப்பி வணங்கிய தம்பதிகளுக்கு உற்றார் உறவினர்கள் அட்சதை தூவி ஆசி வழங்கினர். எனது மகள் தனது காதலை சொன்ன போது எதோ ஒரு மாதிரியாக நினைத்தேன்ம் ஆனால் பையனை பார்த்ததும் ஜென்டில்மேனாக நைஸ் பர்சனாக இருந்தார் என மட்டற்ற மகிழ்ச்சியுடன் கூறினார் மணப்பெண்ணின் தந்தை. Related Link திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய பெண்கள்