news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மனைவியை ஃபேனால் அடித்த கொடூரம்
tv

Also Watch

tv

Read this

மனைவியை ஃபேனால் அடித்த கொடூரம்

பெருங்களத்தூர், செங்கல்பட்டு

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

டேபிள் ஃபேனால் மனைவியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய கணவன். அரக்கத்தனமாக அடித்த அடியில் அடுத்த சிலநிமிடங்களிலேயே உயிரிழந்த மனைவி. டேபிள் ஃபேனால் அடித்துக் கொலை செய்யும் அளவுக்கு கணவனுக்கு மனைவி மீது என்ன வெறி? கொடூர கணவன் சிக்கினானா? நடந்தது என்ன?

பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட பயங்கர சத்தம்
பக்கத்துல வீட்டுல என்ன இவ்வளவு சத்தம் கேக்குதுன்னு, அக்கம் பக்கத்துல உள்ளவங்கலாம் கணேசன் வீட்டு முன்னாடி வந்து நின்னு பாத்திருக்காங்க. வீட்டுக்குள்ள, கணேசனும், அவரோட மனைவி அமுதாவும் மாறி மாறி கத்தி சண்ட போட்டுட்டு இருந்துருக்காங்க. கதவ தட்டி பாக்கலாமா, வேண்டாமான்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருந்த நேரத்துல, கொஞ்ச நேரத்துலேயே அமுதா ஐயோ, அம்மான்னு அலறித்துடிக்குற சத்தம் கேட்டுருக்கு. இதுக்கு மேலயும் பொறுமையா இருக்க வேண்டாம்னு நினச்சு, பக்கத்து வீட்டுக்காரங்கலாம் சேந்து கதவ உடச்சு உள்ள போய் பாத்திருக்காங்க. அங்க, அமுதா தலையில இருந்து ரத்தம் கொட்டுன நிலையில, சடலமா கிடந்திருக்காங்க. அதுக்கப்புறம், என்னாச்சு ஏதாச்சுன்னு பக்கத்து வீட்டுக்காரங்க விசாரிச்சப்பதான், வீட்டுக்குள்ள நடந்த தகராற பத்தி தெரியவந்திருக்கு.

திருமணம் முடிந்து தனியாக வாழ்ந்து வரும் பிள்ளைகள்
செங்கல்பட்டுக்கு அருகே இருக்கும் பெருங்களத்தூர்ல உள்ள ரோஜா நகர சேர்ந்தவங்க கணேசன் - அமுதா தம்பதி. இவங்களோட ரெண்டு பசங்களும் கல்யாணமாகி வெளியூர்ல செட்டிலாகிட்டாங்க. ரோஜா நகர்ல உள்ள வீட்டுல கணேசனும், அமுதாவும் மட்டும்தான் வாழ்ந்துட்டு வந்துருக்காங்க. பசங்ககூட இருக்கும்போது இருந்த ஒற்றுமை, அவங்க கல்யாணமாகி போனதுக்கு அப்புறம் ரெண்டு பேருக்குமே இல்ல. எடுத்ததுக்கெல்லாம் எலியும் பூனையுமா சண்டை போட்டுருக்காங்க.

குழம்பு சுவையாக செய்யவில்லை எனக்கூறி தகராறு
குறிப்பா சோறு சாப்டுற நேரந்தான் ரெண்டுபேருக்கும் பெரிய போர்க்களமே நடந்துருக்குது. என்னதான் குழம்பு வைக்கிற? வாய்ல வைக்க முடியல, இப்படி சமைச்சி போட்டா வீட்டவிட்டே விரட்டி விட்டுருவேன்னு சொல்லி தினமும் மனைவிக்கிட்ட சண்டை போட்ருக்காரு கணேசன். அதுக்கு, அமுதா, என்னால இப்படிதான் சமைக்க முடியும் இஷ்டம் இருந்தா சாப்பிடுங்க, இல்லனா பட்னியா இருங்கன்னு பதிலுக்கு பதில் பேசிருக்காங்க.

கணவன் - மனைவி இடையே மீண்டும் வெடித்த தகராறு
இப்படியே ரெண்டு பேருக்கும் இடையில தினமும் சண்டை சச்சரவா இருந்துருக்குது. அப்பாவும், அம்மாவும் சண்டை போட்டுக்குற விஷயம் தெரிஞ்சு வீட்டுக்கு வந்த பசங்க ரெண்டு பேரும், வயசான காலத்துல இப்படி அடிச்சுக்கிட்டா அக்கம்பக்கத்துல இருக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு சொல்லி கண்டிச்சிருக்காங்க. அதுக்கப்புறம், கொஞ்ச நாள் சைலண்ட்டா இருந்த கணேசனுக்கும், அமுதாவுக்கும் இடையில மறுபடியும் சாப்பாட்டால சண்ட வந்துருக்கு. அந்த சின்ன சண்டதான் கணேசன் கொலை செய்யவே தூண்டிருக்கு.

"நீங்களே சாப்பாட்டை போட்டு சாப்பிடுங்க"

சம்பவத்தன்னைக்கு வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்துருக்காரு கணேசன். அப்போ, மனைவி அமுதா சேர்ல உக்காந்து டிவில நாடகம் பாத்துட்டு இருந்துருக்காங்க. வேலைய முடிச்சிட்டு பசியோட வீட்டுக்கு வந்த கணேசன், சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிருக்காரு. அவரு சொல்றத அமுதா காதுல வாங்கிக்காம பசிச்சா நீங்களே எடுத்து வச்சு சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு, நாடகம் பாத்துட்டு இருந்தாங்க. அமுதா அப்படி சொன்னதும் கணேசனுக்கு உச்சக்கட்ட கோவத்த ஏற்படுத்திருக்குது. அதுக்குப்பிறகு, பல வாக்குவாதங்களுக்கு அப்புறம் சாப்பாடு எடுத்து வச்சிருக்காங்க அமுதா.


Related Link
அரசு மதுபானக் கடையில் தகராறு

அரசு மதுபானக் கடையில் தகராறு

வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி வீசிய மனைவி அமுதா

அப்போ, மனுஷன் நிம்மதியா சாப்ட முடியுதா? என்ன குழம்பு இது கேவலமா இருக்குன்னு கணேசன் சொல்ல, என் வயசுக்கு இப்படிதான் வைக்க முடியும், சும்மா குறை சொல்லிட்டே இருக்காதீங்கனு கத்திருக்காங்க மனைவி அமுதா. ஏற்கெனவே சாப்பாடு எடுத்து லேட்டா எடுத்து வச்சான்னு கோவத்துல இருந்த கணேசன், மனைவி அமுதாவ கண்மூடித்தனமா தாக்கிருக்காரு. பதிலுக்கு அமுதாவும் வீட்டுல உள்ள பொருட்கள தூக்கி வீசிருக்காங்க.

டேபிள் ஃபேனால் அமுதா தலையில் அடித்த கணேசன்
அப்ப, வீட்டுல இருந்த டேபிள் ஃபேன எடுத்து மனைவி அமுதாவோட தலை மேலயே போட்டிருக்காரு கணேசன். அதுல, அவங்களுக்கு தலையில இருந்து அதிகபடியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாங்க. அக்கம்பக்கத்துல உள்ளவங்க கொடுத்த புகார் அடிப்படையில சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், அமுதா சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சிட்டு, கணேசன்கிட்ட விசாரணை பண்ணதுலதான் அமுதாவுக்கு என்ன நடந்துச்சு-ங்குறது தெரியவந்திருக்கு. அதுக்குப்பிறகு, கணேசன் மேல கொலை வழக்குப்பதிவு பண்ணி விசாரணை நடத்திட்டு இருக்காங்க.

Related Link
கள்ளக் காதலால் நடந்த கொடூர சம்பவம்

கள்ளக் காதலால் நடந்த கொடூர சம்பவம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமர்சனங்களால் உடைந்து போன விக்னேஷ் சிவன்

1
31 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved