Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டின் முன்பு படுத்திருந்த 10 அடி நீளம் மற்றும் 400 கிலோ எடை கொண்ட முதலையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
கூடுவெளி கிராமத்தில் அருள் பிரபு என்பவரின் வீட்டுக்கு முன்பு முதலை படுத்திருந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சென்று முதலையை பிடித்து, சிதம்பரம் அருகில் உள்ள வக்கார மாரி கிராமத்தில் உள்ள ஏரியில் விட்டனர்.
இந்த ஏரியை சுற்றி தற்போது கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், அதையும் தாண்டி முதலை வெளியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.