news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சரிவர குடிநீர் விநியோகம் செய்யாததை தட்டி கேட்ட நபர்
tv

Also Watch

tv

Read this

சரிவர குடிநீர் விநியோகம் செய்யாததை தட்டி கேட்ட நபர்

கூத்தாநல்லூர் - திருவாரூர்

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR ISSUE

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வெங்காரம் பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் வயது 55 இவர் அப்பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனராக பணியாற்றி வரும் ராஜா என்பவரை பார்த்து சரிவர குடிநீர் விநியோகம் வரவில்லை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனராக பணியாற்றி வரும் ராஜா ஆத்திரமடைந்து அவரது உறவினர் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி விஜிலா மகன் ஹரிஷ்

உறவினர் காமராஜ் ஆகியோரை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர் இதில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் விஜிலா ஹரிஷ் காமராஜ் ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் ராஜா அவரது சகோதரர் ஆனந்தராஜ், உறவினர் ஜெகதீஷ், விக்னேஷ், வினோத், ராஜா ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து ராஜா மற்றும் ஆனந்தராஜா இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஆனந்தராஜ் தந்தை தையான் கொடுத்த புகாரின் பேரில் காமராஜ் ரவிச்சந்திரன் ஹரிஷ் கலையரசன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ரவிச்சந்திரன் மற்றும் ராஜா ஆகிய இருவரும் ஒரே கட்சிகளில் இருந்து ராஜா வேறொரு கட்சிக்கு சென்றதால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாக காவல்துறை சார்பில் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இதையும் படியுங்கள் :  அங்கன்வாடி மைய மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 4 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved