Also Watch
Read this
By: Manigandan Raja

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி வளாகத்தினுள் உள்ள ஒரு கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று செய்யப்பட்டு வருகிறது இந்த அங்கன்வாடி மையத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல குழந்தைகளை பெற்றோர் அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்து விட்டு சென்ற சிலமணி நேரத்தில் உட்பக்க மேற்கூரை சிமெண்ட் பூச்சு கட்டைகள் உடைந்து தரையில் விழுந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் மேலே விழாததால் குழந்தைகள் காயங்களின்றி உயிர் தப்பினர் உடனே ஆசிரியர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றி அருகில் உள்ள பள்ளிக்கூட கட்டிடத்தில் அமர வைத்தனர்.
இதுகுறித்த தகவல் பெற்றோருக்கு தெரியவந்ததை தொடர்ந்து பெற்றோர் அங்கன்வாடி மையத்திற்கு வந்து தங்களது குழந்தைகளை அழைத்து சென்றதோடு பாதுகாப்பான முறையில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைத்து தந்தால் மட்டுமே குழந்தைகளை தொடர்ந்து அனுப்புவோம் என்று கூறி சென்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : பூட்டிய வீட்டின் சமையலறையில் திடீர் தீ விபத்து