news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதைவட மின்சார பெட்டி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
tv

Also Watch

புதைவட மின்சார பெட்டி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

நாமக்கல், திருச்செங்கோடு

26

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நாமக்கல் நெருப்பு பிரச்சனை

மின்சார பெட்டி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு  : 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேரோடும் நான்கு வீதிகளில் தமிழக அரசால் மின்சார வாரியத்தால் மின் புதைவட கம்பிகள் ஜங்ஷன் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வரும் அதிக மின் அழுத்த பாதிப்பால் ஜங்ஷன் பாக்ஸ்களில் அடிக்கடி தொடர் தீ விபத்துக்கள் நடைபெற்று வருகிறது வழக்கமாக உள்ளது.

இன்று மாலை அண்ணா சிலை அருகே உள்ள புதைவட கம்பி ஜங்ஷன் பாக்ஸில் திடீரென புகை அதிகமாக வந்துள்ளது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அந்த ஜங்ஷன் பாக்ஸை திறந்து பார்த்தபோது புகையுடன் கூடிய நெருப்பு வந்துள்ளது உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர்.

அதற்குள்ளாக தீ பெரிய அளவில் வெளியே வந்துள்ளது அருகில் உள்ளவர்கள் மண்ணை மற்றும் தண்ணீரை கொட்டி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அண்ணா சிலை வடக்கு ரத வீதி மிகவும் தொழில் மிகுந்த பகுதியாக உள்ளது மின்வாரிய அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் மற்றும் வர்த்தகத்தினர் கூறினர்.

சார் பதிவாளர் அலுவலகம் துணிக்கடைகள் நகைக் கடைகள் போன்ற தொழில் நிறுவனங்கள் அருகில் உள்ளதால் புகைமூட்டம் எழுந்ததும் அப்பகுதி வியாபாரிகள் மிகவும் அச்சமடைந்தனர்.

Related Link
நூற்றாண்டு கண்ட அரசு தொடக்கப்பள்ளிக்கு சீர்வரிசை

நூற்றாண்டு கண்ட அரசு தொடக்கப்பள்ளிக்கு சீர்வரிசை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-4

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved