Also Watch
Read this
Posted on: Jun 27, 2025 01:21 AM
By: Web Team

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் வேள்வி குண்டங்களில் தமிழில் வேள்வி செய்ய அனுமதிப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உரிய உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த கோயிலில் வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது, தமிழில் வேள்வி குண்டங்களை நடத்த அனுமதி கோரி கோவையை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் கும்பாபிஷேங்களில்,
நடைபெறும் குண்ட வேள்வி நிகழ்வுகளில் தமிழில் வேள்வி நடத்துவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்,
செயல் திட்டம் வகுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved