Also Watch
Read this
By: Manigandan Raja

மதுபோதை ஆசாமிகள் அட்டகாசம் :
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்வதால் தினம் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து சாமி தரிசனம் மற்றும் 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்தவனும் உள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வசதிகளுக்காக நகர காவல் நிலையத்தை அண்ணாமலையார் கோயில் காவல் நிலையமாக மாற்றப்பட்டது.
குறிப்பாக கிரிவலப் பாதை மற்றும் மாட வீதியில் போலி சாமியார்கள் மற்றும் குடிபோதையில் ரகலையில் ஈடுபடும் நபர்களால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அண்ணாமலையார் கோவில் புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டது.
அப்படி இருந்தும் இரவு நேரங்கள் குடிபோதையில் இருசக்கர வாகனங்களை சுற்றும் இளைஞர்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல் போலி சாமியார்கள் குடிபோதையில் பக்தர்களுக்கு நெற்றியில் விபூதி பூசுவதில் ஏற்படும் போட்டியில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகளும் ஆங்காங்கே நடைபெற்று தான் வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சக்தி தியேட்டர் திரையரங்கம் அருகில் தனியார் தங்கும் விடுதி முன்பாக மர்ம நபர்கள் குடிபோதையில் தங்கும் விடுதியில் மேலாளர் இடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர் அதோடு மட்டுமல்லாமல் அங்கு இருந்த காரின் மிரர் கண்ணாடியை சாலையில் போட்டு உடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அண்ணாமலையார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக அண்ணாமலையார் கோவில் காவல் நிலையம் திறந்தது அதனை நிறைவேற்றும் வகையில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி குடிபோதையில் சுற்றி தெரியும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved