Also Watch
Read this
By: Web Team

தொடர் விடுமுறையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை விடுமுறை என தொடர் விடுமுறையொட்டி குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையை காண ஆர்வம் காட்டினர்.
கட்டிடகலை நுட்பங்களை கண்டு ரசித்த சுற்றுலாபயணிகள் மன்னர் காலத்தில் பயன்படுத்தி வந்த வாள், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து சென்றனர்.