Also Watch
Read this
By: Web Team

டிப்பர் லாரி ஏற்படுத்திய விபத்தால், கொதித்தெழுந்த கிராம மக்கள், 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூர் சுற்றுவட்டாரத்தில், கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, எம்.சாண்டல், மணல், ஜல்லிகளை ஏற்றிச் செல்வதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட டிப்பர் லாரிகள் காஞ்சிபுரம், வந்தவாசி புறவழிச் சாலை மார்க்கமாக மாமண்டூர் பகுதியை கடந்து சென்று வருகிறது.

இந்நிலையில், மாமண்டூர் பகுதியில் உள்ள சாலையில், வேகத்தடை இருந்தும், டிப்பர் லாரிகளால் விபத்து தொடர்கிறது. இன்று காலை டிப்பர் லாரியால் ஏற்பட்ட விபத்தில், ஒரு வயதுடைய குழந்தையும் பெண்மணியும் பலத்த காயத்துடன் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால், மாமண்டூர் கிராம மக்கள் கொந்தளிப்புடன், 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.

இதனால், புறவழிச் சாலையின் இருபுறமும் சுமார் ஐந்து கிமீ தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆர்டிஓ முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இப்பகுதியின் வழியாக டிப்பர் லாரிகள் செல்லக்கூடாது என்று கிராம மக்கள் வலியுறுத்தினர்.