news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜிஎஸ்டி மாற்றத்தை வரவேற்கிறேன்: ப.சிதம்பரம்
tv

Also Watch

tv

Read this

ஜிஎஸ்டி மாற்றத்தை வரவேற்கிறேன்: ப.சிதம்பரம்

’இப்போதாவது திருந்தினார்களே...’

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pc

ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம், 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் கூறியதாவது:

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், 1.7.2007ல் இந்த சட்டத்தை அமல்படுத்தும்போதே, இது தவறு, இது போன்ற பல்வேறு வரி விகிதங்களை வைக்காதீர்கள் என்று அறிவுறுத்தினோம். தலைமை பொருளாதார ஆலோசகர் அர்ஜுன் சுப்பிரமணியம், இது தவறு என அறிவுறுத்தினார்.

நிதியமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ சொல்வதைக் கேட்கவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளோம். பல தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் தவறுகளை திருத்த வேண்டும் என கூறினார்கள்.

இப்போதாவது இதை உணர்ந்து, தவறுகளை திருத்தியதற்காக நான் நன்றி சொல்கிறேன். எட்டு ஆண்டுகள் நடுத்தர மக்களை, ஏழை மக்களை கசக்கிப் பிழிந்தனர். 12%, 18% இருந்ததை 5% ஆக குறைத்துள்ளதாக கூறி உள்ளார்கள்.

இத்தனை ஆண்டுகளாக 18 சதவீதம் அதே மக்கள் தானே தந்தார்கள்.

மக்களை கசக்கிப் பிழிந்து மக்களின் பணத்தை எல்லாம் வரியாக வசூல் செய்து இப்போதாவது மனம் திருந்தி இந்த வரி விகிதங்களை குறைத்து உள்ளார்கள். அதற்காக நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

இதையும் கேளுங்கள்: 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்… | P Chidambaram | GST Reforms

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 50 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau