Also Watch
Read this
By: Manigandan Raja

40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு :
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த நபரின் சடலத்தை, 10 மணி நேரம் போராடி பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். காங்ரி கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர் மூச்சு திணறி உயிரிழந்த நிலையில், ஆழ்துணை கிணறுக்கு அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அவரது சடலம் மீட்கப்பட்டது.
மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையக் கட்டடத்தில் தீவிபத்து :
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் லால் கோத்தியில் உள்ள மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையக் கட்டிடத்தில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த நிலையில், அதிக வெப்பம் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாகவும், தீவிபத்தில் பல ஆவணங்கள் தீயில் கருகியதாக தெரிவித்தனர்.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பக்தர்களை காக்க நடவடிக்கை :

உத்தரபிரதேசம் மாநிலம் , அயோத்திக்கு வரும் பக்தர்களின் வெப்பத்தை தணிப்பதற்காக புது விதமான நடவடிக்கையை அம்மாநில அரசு எடுத்துள்ளது. சுட்டெரிக்கும் வெய்யிலில் இருந்து பக்தர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ராட்சத புகை தெளிப்பான்கள் மற்றும் புகை எதிர்ப்பு கருவிகள் மூலம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து :

தலைநகர் டெல்லியில் ரமேஷ் பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குடியிருப்பில் இருந்த மக்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு வெளியேறினர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பற்றி எரிந்த தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.