Also Watch
Read this
By: Manigandan Raja

மாபெரும் ஆளுமைகள், புராண நாயகர்கள் என்றெல்லாம் புகழாரம் :
ஜம்மு காஷ்மீர் அரசு பள்ளி நூலக புத்தகங்களில் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை, "மாபெரும் ஆளுமைகள், புராண நாயகர்கள்" என்ற வரிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசு பள்ளி நூலகங்களில் பிரிவினைவாதிகளை புகழ்ந்து புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் குற்றம்சாட்டியதை அடுத்து, அம்மாநில பள்ளிக் கல்வித்துறை புத்தகத்தை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 23 பேர் பயங்கரவாதிகள் :
ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளுடன் தொடர்புடைய, பாகிஸ்தானை சேர்ந்த 23 பேரை உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 23 பேரும், பயங்கரவாதத்துக்கு ஆள்சேர்த்தல், பயிற்சி அளித்தல், ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் வழங்குதல் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பையில் 100 மி.மீ. அளவு கொட்டித் தீர்த்த கனமழை :

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறிய நிலையில், இதுவரை 5 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததாக வானிலை மையம் கூறியுள்ள நிலையில், பல இடங்களில் மழை நிற்காமல் பெய்து வருகிறது.