news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews எதிர்க்கட்சிகள் பரப்பிய வதந்தியை பொய்யாக்கினோம்
tv

Also Watch

tv

Read this

எதிர்க்கட்சிகள் பரப்பிய வதந்தியை பொய்யாக்கினோம்

குஜராத்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

எரிவாயு விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச்சு :

மேற்காசிய போர் பதற்றத்தின்போது ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி குறித்து எதிர்க்கட்சிகள் பரப்பிய வதந்தியை பொய்யாக்கி 7 நாட்களில் தீர்வு கண்டதாக பிரதமர் மோடி கூறினார். மேற்காசிய போரால், தொழில் பயன்பாட்டு எரிவாயுவுக்கு பதிலாக சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்யுமாறு சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உத்தரவிட்டு நிலைமை சமாளித்ததாக தெரிவித்தார்.

250-வது அமெரிக்கா சுதந்திர தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து :

இந்தியா, அமெரிக்காவின் நட்புறவு உலக நலன்களின் உந்து சக்தியாக மாறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க 250-வது சுதந்திர தினத்தை ஒட்டி, அதிபர் டிரம்ப் மற்றும் நாட்டு மக்களுக்கு 140 கோடி இந்திய மக்களின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம்  :

இந்தியா - இஸ்ரேல் இடையிலான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.

Related Link
ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 'எல் நினோ' தீவிரமடையும்

ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 'எல் நினோ' தீவிரமடையும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்டவிரோதமாக திரைப்படம் பதிவிறக்கம் என புகார்

1
1 hr 16 mins agoshare
Telegram








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau