Also Watch
Read this
By: Manigandan Raja

டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் :
திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் சட்டவிரோதமாக டெலிகிராம் செயலி மூலம் பதிவிறக்கம் செய்யப்படுவதாக எழுந்த புகாரில் டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சட்டவிரோத பதிவிறக்கம் தொடர்பாக 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புனேவில் வெளுத்து வாங்கும் கனமழை :

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் பெய்த கனமழையால் இரு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதுகுறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் ராஜ்மாச்சி கோட்டைக்கு அப்பால் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், தற்போது சாலையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், ஜுன்னார் காவல் எல்லைக்குட்பட்ட இங்லுன் காட் பகுதியிலும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.