news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உலகக் கோப்பை கால்பந்து : பிரேசில், அர்ஜெண்டினா, நார்வே அணிகளும் தகுதி
tv

Also Watch

tv

Read this

உலகக் கோப்பை கால்பந்து : பிரேசில், அர்ஜெண்டினா, நார்வே அணிகளும் தகுதி

கால்பந்து

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உலகக் கோப்பை கால்பந்து

பிரேசில், அர்ஜெண்டினா, நார்வே அணிகளும் தகுதி :

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலுறுதிக்கு முந்தைய சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மொத்தம் 48 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் முதல் சுற்று முடிவில் சிறப்பாக விளையாடிய 32 அணிகள், அடுத்த சுற்றுக்கு முன்னேறின. தற்போது இந்த சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான "ரவுண்ட் ஆப் 16" சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பராகுவே, பிரான்ஸ், கனடா, மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின், அமெரிக்கா, பெல்ஜியம், பிரேசில், நார்வே, மெக்சிகோ, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, எகிப்து, சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய தகுதி பெற்றுள்ளன.

ஃபிஃபா உலக கோப்பை தொடரில் தொடரும் மெஸ்ஸி சாதனை :

(Courtesy : Reuters)

உலகக்கோப்பை தொடரில் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி படைத்துள்ளார். அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகள் மோதிய ஆட்டத்தில் அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி 1 கோல் அடித்தார்.

இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும், 2 உலகக் கோப்பை தொடரில் 7 கோல்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய ஃப்ரான்ஸ் அணி :

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்று தொடங்கிய 3 வது சுற்றின் 2வது போட்டியில் ஃப்ரான்ஸ் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. பராகுவே மற்றும் ஃப்ரான்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியின் 70 வது நிமிடத்தில் ஃப்ரான்ஸ் வீரர் எம்பாபே ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் ஃப்ரான்ஸ் அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ :

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்று தொடங்கிய 3 வது சுற்றின் முதல் போட்டியில் மொராக்கோ அணி வெற்றி பெற்று முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது. கனடா மற்றும் மொராக்கோ அணிகள் மோதிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியின் 50 வது மற்றும் 82 வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் azzedine ounahi இரு கோல்கள் அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து கூடுதல் நேரத்தில் மொராக்கோ வீரர் soufiane rahimi மேலும் ஒரு கோல் அடித்ததால் அந்த அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related Link
கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ரொனால்டோ..?

கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ரொனால்டோ..?

                   
              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜூலை - செப்டம்பர் மாதங்களில் 'எல் நினோ' தீவிரமடையும்

0
4 mins agoshare
எல் நினோ








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau