Also Watch
Read this
By: Manigandan Raja

பீகாரில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் போட்டி
பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரின் பங்கிப்பூர் தொகுதி, மத்தியப் பிரதேத்தின் தாட்டியா தொகுதி, குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறுகிறது.
கடந்த ஒருவாரமாக கொட்டித்தீர்த்து வரும் கனமழை
அசாமில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் மாநிலமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மழை வெள்ளத்துக்கு இதுவரை 78 பேர் பலியானதாக மாநில அரசு அறிவித்துள்ளதோடு, 7 மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித் தீவுகளாக மாறியுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
உயிருடன் புதைக்கப்படும் சாகச நிகழ்ச்சியில் விபரீதம்
ஹரியானாவில் உயிருடன் புதைக்கப்படும் சாகச நிகழ்ச்சியில், இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபரீதாபாத்தின் கெளஞ்சி கிராமத்தை சேர்ந்த தீபக்கின் குடும்பத்தினர், நூஹ் மாவட்டத்தின் கோரி கிராமத்தில் சாகச நிகழ்ச்சி நடத்தினர். அப்போது, தீபக்கை ஒரு சாக்குப்பையில் கட்டி பிரத்யேகமாக தோண்டப்பட்ட குழிக்குள் இறக்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved