Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய அரசுக்கு மெட்டா நிறுவனம் விரிவான கடிதம்
பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக மெட்டா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், பிரதமர் உள்ளிட்ட முக்கிய கணக்குகளின் பதிவுகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை விவரித்துள்ளது.
மேலும், பிரதமர் பதிவிட்ட உள்ளடக்கங்கள் மீது கூடுதல் கண்காணிப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
கொட்டித் தீர்த்த கனமழையால் 6 மாவட்டங்களில் வெள்ளம்
ஒடிசாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் 6 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் வடமாவட்டங்களில் மட்டும் மழை மற்றும் வெள்ளத்தால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் அதிரடி கைது

ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்க காவல்துறையால் மொத்தம் 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும் மேல் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய மாவோயிஸ்ட்டை போலீஸார் ஜார்க்கண்டில் கைது செய்தனர்.
ஜார்க்கண்டின் கிரிதி மாவட்டம் மத்னாடி கிராமத்தை சேர்ந்த மிசிர் பேஸ்ரா மீது கொள்ளை மற்றும் குண்டுவெடிப்புகள் உள்பட 175 வழக்குகளில் 3 மாநில போலீஸார் தேடி வந்தனர்.