news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கனமழையால் நிலச்சரிவு: 2 சகோதரர்கள் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

கனமழையால் நிலச்சரிவு: 2 சகோதரர்கள் உயிரிழப்பு

மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கனமழை

தாயும், மூத்த சகோதரனும் படுகாயங்களுடன் சிகிச்சை 

நாகாலாந்தின் மோகோக்சுங் நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். முவாலோங் சங்தாம் மற்றும் த்ரிடிபா சங்தாம் ஆகியோர் உயிரிழந்த நிலையில், அவர்களின் தாயாரும், மூத்த சகோதரனும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

18 - 25 வயதுக்குட்பட்ட 7,000 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று 

கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அனைத்து கல்லூரிகளிலும் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாக சமூகத்தின் கிராம பாதுகாவலர் சுட்டுக் கொலை 

மணிப்பூரில் நாகா இனத்தை சேர்ந்த கிராம பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நோனி மாவட்டத்தின் பிட்டியாங் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், நாக இனத்தின் கிராம பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

Related Link
புரட்டிப்போட்ட கொடிய வெள்ளப்பெருக்கு, 68 பேர் பலி, 5.24 லட்சம் பேர் பாதிப்பு

புரட்டிப்போட்ட கொடிய வெள்ளப்பெருக்கு, 68 பேர் பலி, 5.24 லட்சம் பேர் பாதிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சுன்சாரி மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு

0
4 mins agoshare
நேபாளம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau