news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மேகதாது தேவையில்லை என ராகுல் பேசுவாரா? அன்புமணி சவால்
tv

Also Watch

மேகதாது தேவையில்லை என ராகுல் பேசுவாரா? அன்புமணி சவால்

பாஜக கூட்டணியிலிருந்து விலக தயார்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காவிரி பிரச்சனையில், தமிழ்நாட்டிற்கு ஆதரவாக ராகுல் காந்தி ஒரே ஒரு வார்த்தை பேசினாலும் பாஜக கூட்டணியில் இருந்து விலகத்தயார் என சவால் விடுத்துள்ள அன்புமணி, தமிழ்நாட்டிற்கு வரும் ராகுல்காந்தி மேகதாது வேண்டாம் என பேசுவாரா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

அழுத்தம் தர வேண்டும்
இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி கூறியதாவது;
மேகதாது அணையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. இவ்வாறு அங்கீகரிக்கப்படாத ஒன்றில் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது. ஒன்றிய அரசிடமும் பிரதமர் மோடியிடமும் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். மேகதாது அணையைக் கட்ட விடக் கூடாது என ஒன்றிய அரசுக்குத் தான் அழுத்தம் தர வேண்டும்.

Related Link
என்எல்சி சுரங்க வளையத்தில் தென்குத்து கிராமம், பாலைவனமாக மாறுகிறதா கடலூர்?

என்எல்சி சுரங்க வளையத்தில் தென்குத்து கிராமம், பாலைவனமாக மாறுகிறதா கடலூர்?

குடிப்பதற்கு கூட கிடைக்காது
கர்நாடக அணையில், இன்றைக்கு 62 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, இரு முறை அறிவுறுத்திய போதிலும், அவர்களிடம் நீர் இல்லை என்று கூறினர். மேகதாது அணை கட்டுவதற்கு முன்பாகவே, கர்நாடகத்தில் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்குத் தர மறுக்கும்நிலையில், அணை கட்டியபிறகு குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காது.

முதல்வர் விஜய்க்கு...
தமிழக முதல்வர் விஜய், கர்நாடகத்துக்கு செல்லக் கூடாது. அதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள். இது தவெகவின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது, தமிழ்நாட்டின் பிரச்சனை. இதனை வேறு விதமாக கர்நாடகம் கொண்டு செல்கிறது. அதில் முதல்வர் விழுந்து விடக் கூடாது. இந்த விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் கூட்டுச் சதி செய்து வருகின்றன. இதில், தமிழ்நாடு விழுந்து விடக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கை.

ராகுல்காந்தி பேசுவாரா? சவால்...
கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதெல்லாம் காவிரி நீருக்காகத் தான், மேகதாது அணைக்காக அல்ல. மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள்.

அவரிடம் வலியுறுத்த நாங்கள் தயாராக உள்ளோம். அதேபோல, மேகதாது அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தியிடம் சொல்ல மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கிறதா? ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்து உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved