Also Watch
Read this
வரும் ஞாயிற்றுக்கிழமையில், லெக் பீஸ், பிரியாணி என்று சிக்கன் சாப்பிட திட்டமிட்டு உள்ளீர்களா? அசைவ பிரியர்களுக்கான ஷாக் நியூஸ் இது தான்...

ஜூலை 31 முதல்...
வரும் ஜூலை 31ஆம் தேதியில் இருந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள கறிக்கோழி சில்லறை விற்பனைக் கடைகள் அனைத்துமே காலவரையறையின்றி மூட உள்ளனர். கோழி வணிகர்கள் கூட்டமைப்பு இந்த அதிரடி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் சிக்கனுக்கு பயங்கர தட்டுப்பாடு வரப் போகிறது. ஏன் இந்த திடீர் போராட்டம்? வியாபாரிகளின் கோரிக்கை என்ன?

கோழித் தீவனம்...
தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், கோழிப் பண்ணை நிறுவனங்கள் அரசு கூறி உள்ள தீவனக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது தான். பொதுவாக, பண்ணைகளில் இருந்து கறிக்கோழிகளை கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும்முன், குறைந்தது 12ல் இருந்து 15 மணி நேரத்துக்கு முன்னாடியே கோழிகளுக்கு தீவனம் வைப்பதை நிறுத்த வேண்டும். ஆனால், கோழி உற்பத்தி நிறுவனங்கள் இந்த விதியை மதிப்பதே இல்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தீவனம் கொடுப்பதால்...

சிக்கன் கிடைப்பதே கஷ்டம்
'மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் மூலமாக கோழிப் பண்ணைகளை கண்காணித்து, இந்த தீவனக் கட்டுப்பாட்டு விதியை கட்டாயமாக்க வேண்டும்’ என கோரிக்கை வலுத்துள்ளது. இந்த போராட்டத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் கிட்டத்தட்ட 60,000க்கும் மேற்பட்ட சில்லறை கோழி இறைச்சிக் கடைகளை மூட உள்ளனர். இதற்கு அண்டை மாநிலமான கேரளாவின் கோழி வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால், ஜூலை 31க்கு பிறகு சிக்கன் கிடைப்பதே கஷ்டம் என்கின்றனர். அப்படியே கிடைத்தாலும், தற்காலிகமாக விலை உயரவும் வாய்ப்பிருக்காம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved