news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சுன்சாரி மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு
tv

Also Watch

சுன்சாரி மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு

பாதுகாப்பு பணி தீவிரம்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நேபாளம்

மத ஊர்வலத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து உத்தரவு

நேபாளத்தின் சுன்சாரி மாவட்டத்தில் வகுப்புவாத வன்முறை வெடித்ததை தொடர்ந்து காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கப்டங்குஞ்ச் பகுதியில் நடந்த மத ஊர்வலத்தில் ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் மதக் கொடிகளைக் கட்டுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.

நிலைமை கட்டுப்பாட்டை மீறியதைத் தொடர்ந்து, கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 22 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் 

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் இந்த தாக்குதல்கள் மேற்கு நகரமான லிவிவ் வரை பரவியதால், அண்டை நாடான போலந்து தனது வான்வெளியைப் பாதுகாக்க போர் விமானங்களை பறக்கவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் பேட்ரியாட் ஏவுகணைகளை தயாரிப்பதற்கான உரிமங்களை வழங்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டதாகக் கூறிய ஜெலென்ஸ்கி, அமெரிக்காவிலிருந்து திரும்பிய நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

Related Link
நீக்கப்பட்ட பிரதமரின் வீடியோ, பகிரங்க மன்னிப்பு கோரிய மெட்டா

நீக்கப்பட்ட பிரதமரின் வீடியோ, பகிரங்க மன்னிப்பு கோரிய மெட்டா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved