news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews காஜல் அகர்வாலுக்கு கேரவனில் நடந்த பேரதிர்ச்சி
tv

Also Watch

காஜல் அகர்வாலுக்கு கேரவனில் நடந்த பேரதிர்ச்சி

எவ்வளவு பெரிய ரசிகராக இருந்தாலும்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காஜல் அகர்வால்

அந்த நபரை எச்சரித்து அனுப்பினேன் 

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துருக்காங்க. அதில்,"சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் நான் எனக்கு கொடுக்கப்பட்ட கேரவனில் ஓய்வெடுத்துட்டு இருந்தேன்.

அப்போ, படத்தில் உதவிய இயக்குநராக பணியாற்றும் ஒரு நபர், திடீர்னு கேரவனுக்குள்ள நுழைஞ்சாரு. பின், அவரோட சட்டை பட்டனை கழற்றி, நெஞ்சில் என்னுடைய பெயரை பச்சை குத்தியிருந்ததை காட்டினாரு.

இதை சற்றும் எதிர்பார்க்காத நான் உடனே, எவ்வளவு பெரிய ரசிகராக இருந்தாலும், அனுமதி இல்லாமல் கேரவன் உள்ளே நுழைஞ்சு இப்படி செஞ்சது தவறுன்னு அந்த நபரை எச்சரிச்சு அனுப்பினேன்னு என பேசியிருக்காங்க.

விஜய் படம் பார்த்ததால Unfollow செய்வீங்கன்னா.. செஞ்சிக்கோங்க 

தமிழில் '7-ம் அறிவு', 'மெர்சல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீஷா கோஷல், 'ஜன நாயகன்' திரைப்படத்தை பார்த்தவர்களை "தற்குறி" என விமர்சிப்பது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திருக்காங்க.

அதில், "ஒரு படத்தை பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதற்காக மற்றவர்களை இழிவாக விமர்சிப்பதும், அவர்களின் விருப்பத்தில் தலையிடுவதும் முதிர்ச்சியற்ற செயல்.. உங்களுக்கு என்ன பிரச்சனை? வேறு ஹீரோவா இருந்தா இப்படி பேசுவீங்களா? நான் விஜய் படம் பார்த்ததால என்னை Unfollow செய்வீங்கன்னா.

செஞ்சிக்கோங்க..எங்களுக்கு பிடித்த ஹீரோவை கொண்டாடினால், அவர் படத்தை பார்த்தால் நாங்கள் தற்குறிகளா?..ஜனநாயகன் பட வெளியீட்டையும், மாணவர் போராட்டத்தையும் தொடர்புபடுத்துவது அர்த்தமற்றது.." என்று கோபத்துடன் தனது கருத்தை வீடியோவா வெளியிட்டுருக்காங்க.

'ஜனநாயகன்' முதல் வார வசூல் எவ்ளோ தெரியுமா?

பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில தமிழக முதலமைச்சரும் உச்ச நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பல தடைகள் தாண்டி ஜூலை 23-ம் தேதி வெளியாச்சு. இந்த படத்தில், விஜய்யுடன் இணைஞ்சு பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் நடிச்சிருந்தாங்க.

படம் வெளியான முதல் நாளில் இருந்து படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில படத்தின் 7 நாட்கள் வசூல் விவரம் இப்போ வெளியாகிருக்கு. அதன் படி, இந்த படம் வெளியான ஏழே நாட்கள்ல தமிழ்நாட்டில் மட்டுமே 104.5 கோடி ரூபாய் வரை வசூல் செஞ்சிருக்கிறதா சொல்லப்பட்டிருக்கு. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும்னு திரை வட்டாரங்கள்ல எதிர்பார்ப்பு எழுந்திருக்கு.

Related Link
விக்ரம் நடிப்பில் உருவாகிவரும்

விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் "சீயான் 63" திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved