Also Watch
Read this
By: Web Team

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், செவ்வாய்கிழமை மட்டும் 7 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 215 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 302ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேரும், டெல்லி, தமிழ்நாடு, குஜராத்தில் தலா ஒருவரும் என மொத்தமாக 7 பேர் நேற்று தொற்றால் உயிரிழந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved