Also Watch
Read this
By: Web Team

ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது குறித்து உலக நாடுகள் இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும் என விமானப்படை தளபதி ஏபி சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், இன்று ரஷ்யா - உக்ரைன் இடையேயும், இஸ்ரேல் போரும் நடந்து வருவதாகவும், ஆண்டுகள் கடந்தாலும் அது நீடிப்பதாகவும் தெரிவித்தார்.
போரை முடிக்க வேண்டும் என யாரும் நினைக்காததே அதற்கு காரணம் என்றும், ஆனால், இந்தியா விரைவில் போரை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்த ஏபி சிங், நமது நோக்கம் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதால், அவர்களை தாக்கியதாகவும், நமது நோக்கம் நிறைவேறிய பிறகு தாக்குதலை ஏன் நிறுத்தக்கூடாது? எனவும் கேள்வி எழுப்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved