பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடோடி சென்ற அக்கம் பக்கத்தினர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது அதிர்ச்சி. கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண். பெண்ணின் கழுத்தை அறுத்து விட்டு தலைதெறிக்க ஓடிய சிறுவன் யார்? சிறுவனின் கொலைவெறி தாக்குதலுக்கு என்ன காரணம்?பக்கத்து வீட்டில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்ஏகப்பட்ட வீடுகள், அடுத்தடுத்து இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதி அது. ஒரு வீட்டுல கத்தி பேசுனா, பக்கத்து வீட்டுக்கு ஈஸியா கேக்குற அளவுக்கு, வீடுகள்லாம் நெருக்கமா இருந்துருக்கு. அப்படித்தான், ஒரு வீட்டுல இருந்து, திடீர்னு ஒரு பெண் கத்துற சவுண்ட் கேட்டு, அக்கம் பக்கத்துல உள்ளவங்களாம் ஓடிப்போய் பாத்திருக்காங்க. அப்போ, பெண் ஒருத்தங்க ரத்த வெள்ளத்துல துடிதுடிச்சுட்டு இருந்துருக்காங்க. இத பாத்து அதிர்ச்சியடஞ்ச பக்கத்து வீட்டுக்காரங்களும், அந்த பெண்ணோட மகனும் சேந்து அவங்கள மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போயிருக்காங்க. அடுத்து, அவங்களுக்கு என்ன நடந்துச்சு? யாரு இப்படி பண்ணதுன்னு கண்டுபிடிக்க விசாரணையில இறங்குனாங்க போலீஸ். கவிதாவிற்கு 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட பழக்கம்ஆந்திர மாநிலம், சித்தூர் நகர்ல உள்ள சாமந்திபுரம் கிராமத்த சேர்ந்த கவிதா - விஜய் தம்பதிக்கு 12 வயசுல ஒரு மகனும், 15 வயசுல ஒரு மகனும் இருக்காங்க. இதுக்கு நடுவுல, கவிதாவுக்கு அதே ஏரியாவ சேர்ந்த 17 வயசு சிறுவன்கூட பழக்கம் ஏற்பட்டிருக்குது. இந்த பழக்கம், காலப்போக்குல தகாத உறவா மாறி, ரெண்டு பேரும் அடிக்கடி தனிமையில சந்திச்சிக்கிற அளவுக்கு எல்லை மீறி போய்ருக்கு. மகன் வயசுன்னுக்கூட பாக்காம சிறுவன்கூட தகாத உறவுல இருந்துருக்கா கவிதா. கணவன் விஜய் வேலைக்கு போனதும், கவிதா, சிறுவனுக்கு தகவல் சொல்ல, அடுத்த நிமிஷமே கவிதாவ பாக்க அவங்க வீட்டுக்கு போய்ருவானாம் அந்த சிறுவன். Related Link 2ஆவது திருமணத்துக்கு ஆசைப்பட்ட கணவன் அடிக்கடி சிறுவனை வரவழைத்து தனிமையில் இருந்த கவிதாநீ வீட்டுல இல்லாத நேரம் உன் வீட்டுக்கு 17 வயசு சிறுவன் அடிக்கடி வந்து போறான்னு அக்கம் பக்கத்துல உள்ளவங்க, விஜய்கிட்ட சொல்லிருக்காங்க. மொதல்ல அவங்க சொன்னத நம்பாம இருந்தாலும், கவிதாவோட செயல்பாடுகள் ஒவ்வொன்னும் விஜய் மனசுல சந்தேகத்த உண்டாக்கிருக்கு. அதனால, மனைவிய உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சிருக்காரு. கவிதா குளிக்கப்போன கேப்ல, அவங்களோட செல்போன எடுத்து செக் பண்ணி பாத்திருக்காரு. அப்போதான் மனைவியோட களவாணித்தனத்த பத்தி, கணவனுக்கு முழுசா தெரிஞ்சிருக்கு.மருமகள் கவிதாவை கண்டித்த மாமியார் நிர்மலாதன்னோட மனைவி கவிதாவுக்கு, 17 வயசு பையன்கூட தகாத உறவு இருக்குறது தெரிஞ்சு, விஜய் ஆத்திரமடஞ்சிருக்காரு. இந்த விஷயத்த தன்னோட அம்மா நிர்மலாகிட்ட சொல்லி கதறிருக்காரு. அதுக்கப்புறம், விஜயும், அவரோட அம்மா நிர்மலாவும் சேர்ந்து, அந்த சிறுவனோட வீட்டுக்கு போய் கண்டிச்சிருக்காங்க. அதோட மருமகளையும் தகாத வார்த்தைகளால திட்டிருக்காங்க. Related Link ஸ்பாவில் Honey Trap மோசடி காதலனான 17 வயது சிறுவனை வீட்டிற்கு வரவழைத்த கவிதாகணவனுக்கும், மாமியாருக்கும் விஷயம் தெரிஞ்சிருச்சுன்னு பயந்த கவிதா ரெண்டு பேரையும் கொலை செய்ய பிளான் போட்டுருக்கா. அதுக்காக, சம்பவத்தன்னைக்கு நைட்டு காதலனான 17 வயசு சிறுவன வீட்டுக்கு வரவச்சிருக்கா கவிதா. வீட்டுல, கணவனும், மாமியாரும் தூங்கிட்டு இருக்க, கையில மிளகாய் தூள், கத்தியோட வந்த சிறுவன், முதல்ல நிர்மலாவோட கழுத்த அறுத்து, கண்கள்ல மிளகாய்தூள தூவிருக்கான். கவிதாவையும், சிறுவனையும் கைது செய்த போலீசார்அப்போ, அவங்களோட அலறல் சத்தம் கேட்டு விஜயும், பக்கத்து வீட்டுக்காரங்களும் ஓடி வந்துருக்காங்க. எல்லாரும் கூடுனத பாத்து பயந்துபோன சிறுவன் அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டான். வீட்டுல இருந்த கவிதாக்கிட்ட நடத்துன விசாரணையில மொத்த உண்மையும் தெரியவந்ததும், அவங்க மேல கொலை முயற்சி வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், கவிதாவையும், 17 வயசு சிறுவனையும் கைது பண்ணி விசாரணை நடத்திட்டு இருக்காங்க. Related Link காதலிக்காக... மனைவிக்கு நேர்ந்த கொடூரம்