news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஓவர் ஆக்டிங் செய்து வசமாக சிக்கிய கெளரி
tv

Also Watch

ஓவர் ஆக்டிங் செய்து வசமாக சிக்கிய கெளரி

லோதாய், உத்தரப் பிரதேசம்

73

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அறையின் கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி. கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி கதறி அழுத மனைவி. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த க்ளூவால் வெளிவந்த பகீர் உண்மை. கணவனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கபட நாடகம். யாருக்கும் சந்தேகம் வராதபடி அழுது புரண்டு நாடகமாடியும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? நடந்தது என்ன?

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர்
10ந் தேதி காலையில, பக்கத்து வீட்டுல உள்ள கெளரி-ங்குற பெண் கதறி அழுகுற சத்தம் பலமா கேட்டுருக்கு. அவங்களோட சவுண்ட் கேட்டு அக்கம் பக்கத்துல உள்ளவங்கலாம் ஓடி வந்து பாத்தப்ப, அவங்களோட கணவர் லவேகேஷ், அவரோட ரூம்ல தூக்குல தொங்கியபடி கிடந்திருக்காரு. அதுக்கப்புறம், அவர வேக வேகமா ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காங்க. ஹாஸ்பிட்டல்ல அவர பரிசோதனை பண்ணி பாத்த டாக்டர்கள், அவர் உயிரிழந்துட்டதா சொல்லியிருக்காங்க.

கெளரிக்கும், வேறொருவருக்கும் தகாத உறவு இருப்பதாக தகவல்
குடும்பப் பிரச்சினையில லவேகேஷ் இப்படி தூக்குப்போட்டு தற்கொலை பண்ணி இறந்து போய்ட்டாருன்னு கெளரி உருண்டு புரண்டு அழுதிருக்காங்க. எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் இரவு நேரத்துல லவேகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாரோன்னு ஒரு பக்கம் யோசிச்சாலும், கெளரியோட கண்ணீர் மேலயும், வார்த்தை மேலயும் போலீஸுக்கு பெருத்த சந்தேகம் வந்திருக்கு. அதனால, வீட்டு பக்கத்துல உள்ளவங்க கிட்ட விசாரிச்சப்போ, வெளியூர்ல வேல பாத்துட்டு இருந்த லவேகேஷ் ஊருக்கு வந்ததுல இருந்தே கணவன் - மனைவிக்கு இடையில ஒரே பிரச்சினை, டெய்லி சண்டை போட்டுட்டே தான் இருப்பாங்க சார்ன்னு சொல்லியிருக்காங்க. அதோட, கெளரிக்கும், அதே தெருவுல இருக்குற இன்னொருத்தரும் இடையில பழக்கம் இருக்குறதாவும் போலீஸ் கிட்ட ஒருசிலரு சொல்லியிருக்காங்க.

கெளரியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போலீஸ்
கெளரியோட பெர்பார்மன்ஸ் மேல ஏற்கனவே போலீஸுக்கு ஒரு சந்தேகப்பார்வை இருந்துச்சு. பக்கத்து வீட்டுக்காரங்களாம் அவங்களுக்கு வேறொருத்தர் கூட பழக்கம் இருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம், அந்த சந்தேகப்பார்வை ரொம்ப ஸ்ட்ராங் ஆகியிருக்கு. உடனே கெளரிய போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு கிடுக்குப்பிடி விசாரணை பண்ணதுக்கு அப்புறம்தான், லவேகேஷுக்கு நடந்த கொடூர விஷயமே வெளிச்சத்துக்கு வந்துச்சு.

இளைஞர் லவேகேஷுக்கு அறிவுரை கூறிய உறவினர்கள்

உத்தரபிரதேசம் மாநிலம், லோதாய் கிராமத்த சேர்ந்த லவேகேஷும், ராஜஸ்தான சேர்ந்த கெளரியும் கடந்த ஆறு வருஷத்துக்கு முன்னாடி காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்காங்க. இந்த தம்பதிக்கு இப்போ மூணு வயசுல ஒரு மகன் இருக்கான். வெளியூர்ல தங்கி கூலி வேலை பாத்துட்டு இருந்த லவேகேஷ், மாசத்துக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்துட்டு போவாராம். அப்படி, கடந்த சில மாசத்துக்கு முன்னாடி ஊருக்கு வந்துருக்காரு லவேகேஷ். அப்போ, வீட்டுக்கு வந்த மறுநாளே, நீ பாட்டுக்கு சம்பாதிக்கிறேங்குற பேருல வெளியூர்லயே இருக்க, இங்க என்னன்னமோ நடக்கு, பேசாம உள்ளூர்லேயே எதாச்சு வேலைய பாருப்பான்னு சொந்தக்காரங்கலாம் அட்வைஸ் பண்ணிருக்காங்க.



உறவினர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த லவேகேஷ்
என்னடா எல்லாரும் பொடி வச்சு பேசுறாங்களேன்னு சந்தேகப்பட்ட லவேகேஷ், என்னாச்சுன்னு தெளிவா சொல்லுங்கன்னு சொந்தக்காரங்க கிட்ட கேட்டுருக்காரு. அப்ப, நீ ஊர்ல இல்லாத நேரம், உன் மனைவி கௌரிக்கும், இதே தெருவுல உள்ள சுந்தர்-ங்குறவருக்கும் இடையில தகாத உறவு இருக்குறதா சொல்லியிருக்காங்க. இத கேட்டு மனம் நொந்து போன லவேகேஷ், நேரா மனைவிக்கிட்ட போய் சண்ட போட்டிருக்காரு..

சுந்தரிடம் பேசக்கூடாது எனக்கூறி கண்டித்த லவேகேஷ்

கணவன் என்ன தான் கத்தி கூச்சல் போட்டாலும் கெளரி அவரோட பேச்சுக்கு மதிப்பு கொடுக்காம தொடர்ந்து சுந்தர்கூட பேசி பழகிட்டு இருந்துருக்காங்க. இனிமேல் உன்ன தனியா விட்டுட்டு ஊருக்குலாம் போக முடியாது, நான் இனிமேல இங்கேயே தான் இருப்பேன்னு சொல்லி, லவேகேஷ் வேலைக்கு போகாம, நாலஞ்சு மாசமா வீட்டுலேயே தான் இருந்துருக்காரு. அதோட, சுந்தர் கூட பேசுறதையும், பழகுறதையும் நிறுத்தச் சொல்லி, மனைவிய அடிச்சி சண்ட போட்டுட்டே இருந்துருக்காரு.

ஆண் நண்பர் சுந்தருடன் சேர்ந்து சதி திட்டம்
வெளியூர்ல தங்கி கூலிவேலை பாத்துட்டு இருந்த லவேகேஷ் நல்ல சம்பளம் கிடச்சிருக்கு. கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்ச பணம் மொத்தத்தையும் ஊர்ல இருக்குற மனைவி கெளரிக்கு தான் அனுப்பி வச்சிருக்காரு. கணவனோட பணத்துல மூணு வேளையும் உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு, அவருக்கே துரோகம் பண்ணிட்டு இருந்துருக்காங்க கெளரி. நாலஞ்சு மாசமா வேலைக்கு போகாததால லவேகேஷ், மனைவிக்கு எந்த பணமும் கொடுக்கல. ஒழுங்கா வேலைக்கும் போகல, பணமும் கொடுக்க மாட்டிக்காரு, டெய்லி குடிச்சிட்டு வந்து அடிச்சி டார்ச்சர் பன்றாரு, இவரு இங்கேயே இருக்குறதால சுந்தர் கிட்டயும் பேசி பழக முடியலனு நினைச்ச கெளரி காதலன்கூட சேந்து லவேகேஷ தீர்த்துக்கட்ட முடிவு பண்ணிருக்காங்க.

கெளரியையும், சுந்தரையும் கைது செய்த போலீசார்
சம்பவத்தனைக்கு மதுபோதையில தூங்கிட்டு இருந்துருக்காரு லவேகேஷ், அப்ப, தன்னோட பாய் பிரண்ட வீட்டுக்கு கூப்டு, ரெண்டு பேரும் சேர்ந்து லவேகேஷோட கழுத்த நெரிச்சு கொன்னுருக்காங்க. அதுக்கப்புறம், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது அப்டிங்குறதுக்காக, சுந்தரும், கெளரியும் சேந்து லவேகேஷ் சடலத்த அவரோட ரூமுக்கு கொண்டு போய் ஃபேன்ல கயிற கட்டி தற்கொலை மாதிரி செட்டப் பண்ணிருக்காங்க. விசாரணையில லவேகேஷ் தற்கொலை பண்ணிக்கல, அவர திட்டம் போட்டு கொலை பண்ணிருக்காங்கன்னு உறுதிப்படுத்துன போலீஸ், கெளரியையும், சுந்தரையும் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல அடச்சிட்டாங்க.


Related Link
பணியை விட்டு நீக்கியதால் கோபம்

பணியை விட்டு நீக்கியதால் கோபம்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved