Also Watch
Read this
By: Manigandan Raja

2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - பலர் படுகாயம்
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் ராம்பூர் அருகே 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராம்பூர் -கோலிகட் ((Rampur–Kholighat))நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் உதவி கிடைக்காமல் துடிதுடித்து இறந்த இளைஞர்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மகளிர் காவல் நிலையத்திற்கு வெளியே, உதவி கிடைக்காமல் 22 வயது இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உதவி மையம் பூட்டப்பட்டிருந்ததால், கதவை தட்டி உதவி கேட்க முயன்றபோது கண்ணாடி உடைந்து அவரது கையில் ஆழமான காயம் ஏற்பட்டது.
தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ஜெகந்நாதர் கோயிலில் இன்று வருடாந்திர ரத யாத்திரை

ஒடீசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலில் இன்று வருடாந்திர ரத யாத்திரை நடைபெறுவதை முன்னிட்டு மிகப்பெரிய அளவிலான மூன்று தேர்கள் தயார் நிலையில் உள்ளன. நந்திகோஷா, தர்ப்பதலானா மற்றும் தலத்வஜா பெயரிலான தேரை வேதமந்திரங்கள் முழங்க கோயில் முன்பு கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் ரத யாத்திரையில் பங்கேற்கு பூரியில் குவிந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved