Also Watch
Read this
By: Manigandan Raja

பானிபூரி வியாபாரியை பிடித்து போலீசார் விசாரணை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் பானி பூரி சாப்பிட்டு குழந்தைகள் உட்பட நூற்றுக் மேற்பட்டோர் வாந்தி, தலைசுற்றல், வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலை குர்ட் ((Polai Khurd)) கிராமத்தில் ஷோலி என்பவரின் கடையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பாலம் துண்டிக்கப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு

அருணாச்சலப் பிரதேச மாநிலம் குருங் குமே((Kurung Kumey))மாவட்டம் மெச்சுகா ((Mechuka)) பகுதியில் கனமழை காரணமாக பாலம் துண்டிக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கில் சிக்கி நூற்றுக் கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆந்திராவில் பேருந்து சக்கரம் ஏறி பெண் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறி பெண் பலியான விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. எல்லங்கிவாரிபள்ளி பகுதியை சேர்ந்த ஹசீன் தாஜ் என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved