Also Watch
Read this
By: Web Team

பெங்களூருவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநரை அரை நிர்வாணமாக்கி, சிறுமியின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்த வீடியோ வெளியானது.
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்த 15 வயது சிறுமிக்கு ஓட்டுநர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமி தனது சகோதரருக்கு செல்போனில் தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து, சாளுக்யா சர்க்கில் அருகே வந்த பேருந்தை வழிமறித்த சிறுமியின் உறவினர்கள், அதன் ஓட்டுநரை கீழே இறக்கி அவரை அரைநிர்வாணமாக்கி தர்ம அடி கொடுத்தனர்.