Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தானின் அடக்குமுறையால் ஏற்படும் விளைவுகளால் தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அடிப்படை வசதிகள் இல்லாதது, பாகிஸ்தான் அதிகாரிகளின் சுரண்டல் ஆகியவற்றை கண்டித்து அங்கு பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பலர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.