Also Watch
Read this
தவெகவுக்கான ஆதரவு கடிதத்தில் மன்னார்குடி அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் கையெழுத்திடுவது போன்று ஏ.ஐ. மோசடி நடந்துள்ளதாக, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

விஜய்யா, ஆனந்தா, செங்கோட்டையனா?
இதுதொடர்பாக, டி.டி.வி.தினகரன் கூறியதாவது;
அமமுக எம்எல்ஏ காமராஜ் கையெழுத்திட்டதாக வெளியான வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? காமராஜ் கையெழுத்திடுவது போன்ற வீடியோவை எடுத்தது யார்? விஜய்யா, ஆனந்தா, செங்கோட்டையனா? அந்த வீடியோ ஏஐ ஆக கூட இருக்கலாம். ஏஐ மூலம் என்ன வேண்டுமானாலும் உருவாக்கலாம். நகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தபோது, அசல் கடிதம் எங்கே? என அவர் கேட்டு உள்ளார். அதற்கு தவெகவினர் தருவதாக சொல்லிவிட்டு வந்து விட்டனர். அது மோசடி வீடியோ என்று ஆளுநரிடம் கூறிவிட்டோம்.

சும்மா விட மாட்டேன்
முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கின்றனர். என்னை மிரட்ட, பயமுறுத்த, தவெக பார்க்கிறது. எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாகக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். என்னை பயமுறுத்தலாம் என பார்க்கின்றனர். எவ்வளவோ நெருக்கடிகளைப் பார்த்தவன் நான். போலி ஆதரவு கடிதம் விவகாரத்தை சும்மா விடமாட்டேன். தீயசக்தி எல்லாம் தாண்டி தற்போது தவெக தமிழ்நாட்டுக்கு அழிவு சக்தியாக வந்து நிற்கிறது. தமிழ்நாட்டை அழிக்க வந்த சக்தி. ஆட்சிக்கு வரும் முன்பே திமிராக, அகங்காரமாக ஒரு எல்எல்ஏ தானே என மோசடி கடிதம் தருகின்றனர்.

தமிழகத்திற்கு பேரழிவு
ஒரு எம்.எல்.ஏ. தானே என மிரட்ட நினைத்திருக்கலாம். குதிரை பேரம் செய்யவே இப்படி செய்து உள்ளனர். விஜய் ஆட்சி அமைந்தால், அது தமிழகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும். ஆட்சி அமைக்கவே இவ்வளவு ஃபோர்ஜரி வேலைகள் செய்கிறார்கள்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.