news-tamil-logo

3/14/2026, 11:12:56 PM

news-tamil-logo
more
Home news மாணிக்கம் தாகூருக்கு பதில் சொல்ல முடியாது - ஆர்.எஸ்.பாரதி
tv

Also Watch

tv

Read this

மாணிக்கம் தாகூருக்கு பதில் சொல்ல முடியாது - ஆர்.எஸ்.பாரதி

அறிவாலயம், சென்னை

Posted on: Feb 14, 2026 11:56 AM

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மாணிக்கம் தாகூருக்கு பதில் சொல்ல முடியாது என்று, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, செல்வப்பெருந்தகை ஆகியோருக்கு மட்டுமே பதில் சொல்ல முடியும் என்றும் பேசி உள்ளார். கூட்டணி ஆட்சி குறித்து நாளை முதல் யாரும் பேசமாட்டார்கள், விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது
இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது;
கூட்டணி ஆட்சி குறித்து, யாரும் பேசமாட்டார்கள். ரூ.5,000 கொடுத்த பிறகு, மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது அரசியல் கட்சிகளுக்கு தெரியும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது, தமிழக மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ராகுல் காந்தியும் இதை ஏற்றுக் கொள்வார். மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோருக்கு தான் பதில் சொல்ல வேண்டும், மற்றவர்களுக்கு பதில் சொல்ல முடியாது.

மூச்சிருக்கும் வரை மட்டுமே ஊத முடியும்
விஜய்யை, நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மக்களை நம்பி இருக்கிறோம், மக்களும் எங்களை நம்பி வருகிறார்கள். விசிலுக்கு நீண்ட ஆயுள் கிடையாது, மூச்சிருக்கும் வரை மட்டுமே ஊத முடியும். அம்பேத்கர் தான் நமக்கு வழிகாட்டி. பீகார் மாநில தேர்தலின்போது, நிதிஷ்குமாருக்கு மோடி பல கோடிகளை கொடுத்தார். அப்படி எங்களுக்கு கொடுத்தாரா?
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.


Related Link

"கூட்டணி ஆட்சி ஒத்துவராது"

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 19 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved