Also Watch
Read this
By: Manigandan Raja
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலின் சிறுபகுதியை பார்க்கலாம்.

கேள்வி
மீண்டும் ஆட்சிக்கு வருவீர்கள் என உறுதியாக நம்புகிறீர்களா?
முதல்வர்: சந்தேகமே இல்லை நிச்சயமாக நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
கேள்வி:
எதிர்க்கட்சிகளை எண்ணி நீங்கள் கவலைப்படுகிறீர்களா?
முதல்வர்: எத்தனை கூட்டணி வைத்தாலும் திமுகவை வெல்ல முடியாது

கேள்வி:
வரும் தேர்தல் கடுமையான தேர்தலாக இருக்குமா?
முதல்வர்: நிச்சயமாக இல்லை. மக்களை குழப்பவே அப்படி சொல்லப்படுகிறது.
கேள்வி:
2021 தேர்தலை விட 2026 தேர்தலில் இன்னும் சிறப்பாக செயல்படுவீர்களா?
முதல்வர்: ஆம். நிறைய சாதனைகளை செய்திருக்கிறோம். அதை எடுத்து சொல்வோம்.
கேள்வி:
ராகுலுக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்பை பற்றி சொல்லுங்கள்.
முதல்வர்: அரசியலைத் தாண்டி நானும், ராகுலும் சகோதரர்களாக பழகுகிறோம்.

கேள்வி:
வரும் தேர்தலில் காங்கிரசும், திமுகவும் இணைந்து தேர்தலை சந்திக்குமா?
முதல்வர்: நிச்சயமாக. திமுகவும் - காங்கிரசும் இணக்கமாக இருக்கிறோம்.
கேள்வி:
ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தருவீரா?
முதல்வர்: ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. அது இருதரப்புக்கும் தெரியும்
கூட்டணியில் முறிவை ஏற்படுத்த இடையில் சிலர் சதி செய்கிறார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.