news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு
tv

Also Watch

tv

Read this

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

நான் பதிவு செய்து உள்ளேன்...

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ஆன்-லைனில் சுய விபரங்களை பதிவு செய்த முதலமைச்சர் விஜய்,

எல்லா திட்டங்களுக்குமான அடிப்படை என்பதால் ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களை கொடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சமூகவலை தள பக்கத்தில்...
இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சமூக வலை தள பக்கத்தில், வீடியோ காட்சிகளுடன் பதிவிட்டு இருப்பதாவது;
அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்.

நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று ஜூலை17ஆம்தேதி தொடங்குகிறது. இது, வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள் தான், எல்லா திட்டங்களுக்குமான அடிப்படை ஆகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.

நான் பதிவு செய்து உள்ளேன்...
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்து உள்ளேன்.

உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு.

இவ்வாறு முதல்வர் விஜய் பதிவிட்டு உள்ளார்.

Related Link
அப்பா, அம்மா என்னை நம்பினார்கள், மனம் திறந்த சஞ்சய்

அப்பா, அம்மா என்னை நம்பினார்கள், மனம் திறந்த சஞ்சய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

5
50 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau