news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அப்பா, அம்மா என்னை நம்பினார்கள், மனம் திறந்த சஞ்சய்
tv

Also Watch

அப்பா, அம்மா என்னை நம்பினார்கள், மனம் திறந்த சஞ்சய்

சினிமா என்ட்ரி குறித்து...

52

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனது சினிமா என்ட்ரி குறித்து, முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் மனம் திறந்துள்ளார்.

திரைப்பட இயக்குனராக...
முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன், பிரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'சிக்மா' திரைப்படம் வருகிற ஜூலை 31ம் தேதி வெளியாகும் என்று, ஏற்கெனவே படக்குழு அறிவித்துவிட்டது.

ஆனால், வருகிற ஜூலை 23ம் தேதி முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ வெளியாக இருப்பதால், தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், 'சிக்மா' படத்தை படக்குழுவினர் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்து உள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு விரைவில் படக் குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மனம் திறந்த சஞ்சய்
இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் சமீபத்தில் மனம் திறந்து பேசி உள்ளார். அவர் கூறி இருப்பதாவது;
சினிமாவில் நான் அறிமுகம் ஆவது குறித்து என்னோட அப்பா, அம்மா, என் சகோதரி மற்றும் நண்பர்களிடம் பேசினேன்.

அப்போது, அவர்கள் அனைவருமே மிகவும் நேர்மறையாக எனக்கு ஆதரவு அளித்தார்கள். அப்போது தான் அவர்கள் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன்.
இவ்வாறு சஞ்சய் கூறி உள்ளார்.

ஹூரோவாக...
இதுமட்டுமின்றி, தனது நடிப்பு குறித்தும் சஞ்சய் பேசி இருந்தார்.
"சிக்மா படத்துக்குப் பிறகுதான் நடிப்பது பற்றி நான் யோசிப்பேன். அல்போன்ஸ் புத்திரன் சார் என்னை ஹீரோவாக நடிக்க வா என்று கூப்பிட்ட போது, சினிமாவை தொழிலாக தேர்வு செய்யும் முடிவில் நான் இல்லை.

அதனால், அந்த கதையைக் கேட்டு மறுப்பது சரியாக இருக்காது என்பதால், என்னைவிட பெரிய நடிகர் உங்களுக்கு கிடைப்பார், என்று அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் என்னை ஹீரோவாக நினைத்ததே எனக்கு பெருமையாக இருந்தது," என்று கூறி உள்ளார்.

தற்போது இவரது இந்த கருத்து இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

'சிக்மா' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் மூலம் 'ஜேசன் சஞ்சய்' இயக்குநராக அறிமுகமாகிறார்.

Related Link
தண்ணீருக்கு அடியில் 20 மணி நேரம், நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் ஸ்டண்ட்

தண்ணீருக்கு அடியில் 20 மணி நேரம், நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் ஸ்டண்ட்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved