news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடி முதல் வெள்ளி, திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள்
tv

Also Watch

ஆடி முதல் வெள்ளி, திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள்

காவடி எடுத்து வந்து சாமி தரிசனம்

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள்

ஆறுபடை வீடுகளின் ஒன்றானதும் ஐந்தாம் படை வீடாக விளங்குவதுமான திருத்தணி முருகன் கோயிலில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் குவிந்தனர்.

முருகனுக்கு அரோகரா...
திருத்தணி முருகன் கோயிலுக்கு, தினமும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மலை கோவிலுக்கு வந்து, மூலவர் முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் முக்கிய விழாவான ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா அடுத்த மாதம் நான்காம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி சுமந்து வந்து காவடி செலுத்தி வழிபட்டு செல்வது வழக்கம்.

குவிந்த பக்தர்கள்
இந்த நிலையில், இன்று ஜூலை17ஆம் தேதி, ஆடி மாதம் துவங்கி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மலைக்கோவிலில் திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் தீபம் ஏற்றியும் அரோகரா அரோகரா என பக்தி முழுக்கத்துடன் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்து, செல்கின்றனர்.

Related Link
அலங்கரிக்கப்பட்ட கொடிமரம் அருகே எழுந்தருளிய அம்மன்

அலங்கரிக்கப்பட்ட கொடிமரம் அருகே எழுந்தருளிய அம்மன்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved