Also Watch
Read this
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இளம் வீரர் வருகிறார்...
எதிர்வரும் உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக இளம் வீரரான ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. எனவே லார்ட்ஸ் மைதானத்தில் 19ஆம் தேதி நடக்கும் போட்டிக்கு பிறகு அவர் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

11, 26 ரன்கள் மட்டுமே...
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டி-20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள ரோகித் சர்மா, பெரிய அளவில் பேசப்படவில்லை. இங்கிலாந்து அணி உடனான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா 11 ரன்களும், இரண்டாவது போட்டியில் 26 ரன்களுமே எடுத்திருந்தார்.

வரும் 19 ஆம் தேதி...
இந்த சூழ்நிலையில், வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி உடன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிடலாம் எனத் தகவல் உலா வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தொடங்க உள்ள நிலையில், ரோகித் ஷர்மாவுக்கு பி.சி.சி.ஐ. வாய்ப்பு மறுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால் விளையாட முக்கியத்துவம் அளிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved