Also Watch
Read this
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;
வரும் 21ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக பட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

ஜூலை 17 முதல் ஜூலை 21 வரை
உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் (Hot and Humid) இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழைக்கு வாய்ப்பிருக்கா?
சுமார் 7.6 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளம் வழியாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

ஜூலை 18
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 19
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 20, 21
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 22, 23
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved