Also Watch
Read this
முதல்வராக பொறுப்பேற்ற விழா மேடையிலேயே முதல் கோப்பில் கையெழுத்திட்டு புதிய பாணியை, முதலமைச்சர் விஜய் உருவாக்கிஉள்ளார்.
விழா மேடையில் முதல் கோப்பு
தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட சி.ஜோசப் விஜய்,
* வீடுகளில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்
* பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம்
* போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தமிழக முதல்வராக விஜய்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மே 10ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழகத்தின் 18ஆவது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

மூன்று முக்கிய கோப்புகள்
இதனை தொடர்ந்து, பதவியேற்றுக் கொண்ட கையோடு முதல்வர் விஜய், மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கான கோப்புகளில் மேடையிலேயே கையெழுத்திட்டார். தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளான, குடியிருப்பில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டம் ஆகிய 3 திட்டங்களில் அரங்கம் அதிர கையெழுத்திட்டார்.