news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, 3ல் 2 பெரும்பான்மைக்கு சதுரங்க வேட்டை
tv

Also Watch

tv

Read this

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, 3ல் 2 பெரும்பான்மைக்கு சதுரங்க வேட்டை

நாடாளுமன்றத்தின் புதிய புள்ளிவிவர ஆட்டம்

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் 20ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஒரு எதிர்மறை அக்னிப் பரீட்சைக்கு பாஜக தயாராகி வருகிறது.

மூன்றில் இரண்டு பங்கு
இரண்டு முக்கிய அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அரசியலமைப்பு திருத்தங்கள் என்பதால், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு சிறப்புப் பெரும்பான்மை தேவை. இந்த இலக்கை அடைய, கூட்டணி பிளவுகளையும், சிறிய கட்சிகளின் ஆதரவையும் பாஜக நம்பி இருக்கிறது.

தொகுதி மறுவரையறை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், 2 முக்கிய மற்றும் பெரும் சர்ச்சைக்குரிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிடுகிறது. இதில் 130ஆவது அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா என்பது, குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரதமர், முதலமைச்சர் அல்லது அமைச்சர் 30 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டால், சம்மந்தப்பட்டவரை பதவியிலிருந்து நீக்கப் பரிந்துரைக்கிறது.

இரண்டாவது மசோதா மிகவும் சர்ச்சைக்குரிய 131ஆவது திருத்த மசோதா. இந்த முக்கியமான மசோதா, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை, தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைக்கிறது. அதாவது, மக்களவை இடங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைக்கப்படுவதற்கான ஏற்பாடு கொல்லைப்புற வழியில் செய்யப்படுகிறது. இதுதவிர, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற சர்ச்சைக்குரிய திட்டமும் நாடாளுமன்றக் குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

54 வாக்குகள் வித்தியாசத்தில்...
கடந்த ஏப்ரல் மாத நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் (ஏப்ரல் 17 அன்று) மத்திய பாஜக அரசு, தொகுதி மறுவரையறை மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையான 528ல், 298 ஆதரவு வாக்குகளும், 230 எதிர்ப்பு வாக்குகளும் விழுந்தன.

ஆனால், அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா என்பதால், சிறப்புப் பெரும்பான்மை அதாவது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. அந்த எண்ணிக்கை 352 ஆக இருந்தது. இதனால் 54 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா தோற்றது.

20 அதிருப்தி எம்பிக்கள்
இந்த பின்னணியில், தற்போது அனைவரின் கவனமும் மழைக்காலக் கூட்டத்தொடரின் மீதே உள்ளது. அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளும், எதிர்க்கட்சிகளிடையே மாறி வரும் கணக்குகளும் மசோதாக்களை மீண்டும் கொண்டுவந்து நிறைவேற்றி விட முடியும் என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளன. அண்மையில், திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த 20 அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில், 'இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி' என்ற புதிய குழுவாக ஒன்றிணைந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக அங்கம் வகிக்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

திமுக ஆதரவு?
இதேபோல தெற்கில், மக்களவையில் 22, மாநிலங்களவையில் 8 என நாடாளுமன்றத்தில் 30 இடங்களைக் கொண்டுள்ள திமுக, இந்தியா கூட்டணியில் இருந்து விலகத் தொடங்கி உள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்த பின்னரே இந்த பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாக, திமுக மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, கொள்கை அடிப்படையில் அல்ல, எண்ணிக்கை அடிப்படையில் உதவக்கூடும் என்ற பேச்சுகள் வலுவாகக் கிளம்பியுள்ளன.

68 வாக்கு பற்றாக்குறை...
மக்களவையில் தற்போது 540 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற, அரசாங்கத்திற்கு சரியாக 360 வாக்குகள் தேவை. தற்போது, ​​தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் 292 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது 68 வாக்குகள் பற்றாக்குறையாகும். இதை சமாளிக்க பாஜகவிடம் இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி, புதிய நண்பர்களைக் கண்டறிதல்.

பாஜகவுக்கு பெருகும் ஆதரவு
தற்போதைய NDA பலம்- 292 ஆகும். 20 திரிணாமூல் அதிருப்தி எம்.பி.க்கள் இணைந்தால் மொத்த எண்ணிக்கை 312 ஆக உயரும். இதேபோல அதிருப்தி உத்தவ் சிவசேனா (UBT) எம்.பி.க்கள் 6 பேர் இணைந்தால் மொத்த எண்ணிக்கை 318 ஆக அதிகரிக்கும். காங்கிரஸ் உடனான பிளவு காரணமாக 22 திமுக எம்.பி.க்கள் மசோதாவை ஆதரித்தால் மொத்த எண்ணிக்கை 340 ஆகும். சரத் பவார் அணியை சேர்ந்த என்சிபி எம்.பி.க்கள் 8 பேர் ஆதரவளித்தால் அப்போது 348 ஆகும். இதில் ஆர்வமூட்டக் கூடிய விஷயம் என்னவென்றால், சரத் பவார் என்சிபி தலைவர் சுப்ரியா சுலே நிபந்தனைக்குட்பட்ட ஆதரவை வழங்கியுள்ளார். மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் சீராக 50 சதவீத இடங்களை அதிகரிப்பதற்கு அரசு முறையாக உத்தரவாதம் அளித்தால், தனது கட்சி மசோதாவை ஆதரிக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதேபோல, நிபந்தனை அடிப்படையிலான ஆதரவை திமுக வழங்காது என்று நம்மால் உறுதியாகக் கூறமுடியாது.

வெளிநடப்பு செய்தால்...
இந்தக் கட்சிகள் அனைத்தும் NDAவை ஆதரித்தாலும், மொத்த எண்ணிக்கை 348ஐ எட்டும். 360 என்ற இலக்கை அடைய அரசாங்கத்திற்கு இன்னும் 12 எம்.பி.க்கள் தேவைப்படுவார்கள். எனவே YSRCP(4), JMM(3), RLP(1), அகாலி தல்(1) போன்ற சிறிய குழுக்களையும், சில சுயேச்சை எம்.பி.க்களையும் குறிவைக்க வாய்ப்புள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு சாதகமான 2வது வழிமுறை ஒன்று உள்ளது. எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தால் என்னவாகும்? சிறப்புப் பெரும்பான்மையானது, அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

மூன்றில் 2 பங்கு 323 ஆகும்...
திரிணாமூல் அதிருப்தி எம்.பி.க்கள்(20), திமுக(22), உத்தவ் சிவசேனா அதிருப்தி எம்.பி.க்கள்(6) மற்றும் சரத்பவார் NCP எம்.பி.க்கள்(8) வாக்களிக்காமல் இருக்க முடிவு செய்தால் என்ன நடக்கும்? வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 540லிருந்து 484 ஆகக் குறையும். அப்போது மூன்றில் இரண்டு பங்கு இலக்கு என்பது 323 ஆகக் குறையும். தற்போதைய 292 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், NDA கூட்டணிக்கு இன்னும் 31 வாக்குகள் பற்றாக்குறையாக இருக்கும்.

மாநிலங்களவையில் 162 தேவை
இதேபோல, மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதும் அதே அளவு சிக்கலானது. மாநிலங்களவையின் மொத்த பலம் 245, இருப்பினும் தற்போது 242 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளதால், சிறப்புப் பெரும்பான்மைக்கு 162 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் தற்போது 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மசோதா விவகாரத்தில் என்டிஏ கூட்டணிக்கு சரத்பவார் என்சிபி(1 எம்.பி.) மற்றும் திமுக(8 எம்.பி.க்கள்) ஆதரவு கிடைத்தால், மொத்த பலம் 159ஐ எட்டும். அண்மையில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த மூன்று முன்னாள் திரிணாமூல் எம்.பி.க்கள் இந்த மாத இறுதியில் மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்கள் வெற்றி பெற்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 162 ஆக உயரும்.

திமுக வராமல் இருந்தால்...
இருப்பினும், அவை மீண்டும் 245 உறுப்பினர்கள் என்ற முழு பலத்துடன் கூடுவதால், மூன்றில் இரண்டு பங்கு இலக்கு 164 ஆக அதிகரிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அப்போதும் 2 வாக்குகள் பற்றாக்குறை இருக்கும். அவர்கள் ஒய்.எஸ்.ஆர்.சி.பி.(7), பி.ஜே.டி.(5), பி.ஆர்.எஸ்.(3) அல்லது பி.எஸ்.பி.(1) போன்ற நடுநிலைக் கட்சிகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். சரத்பவார் என்சிபி மற்றும் திமுகவைச் சேர்ந்த 9 எம்.பி.க்கள் அவைக்கு வராவிட்டால், அவையின் பலம் 233 ஆகக் குறையும். தேவையான பெரும்பான்மை வாக்குகளின் எண்ணிக்கை 156 ஆக இருக்கும். 150 வாக்குகளுடன் இருக்கும் என்டிஏ கூட்டணிக்கு, தேவையான வாக்குகள் 6 குறைவாக இருக்கும்.

மசோதாக்களின் தலைவிதி...
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 புதிய பாஜக எம்.பி.க்களையும் சேர்த்தால், அவையின் மொத்த பலம் 245 ஆகிறது. 9 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்களிக்காமல் இருந்தால், வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 236 ஆகக் குறைகிறது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 158 ஆகிறது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 153 எம்.பி.க்கள் இருப்பார்கள். எனவே இன்னும் 5 வாக்குகள் தேவைப்படும். மழைக்காலக் கூட்டத்தொடரில், ஒவ்வொரு வாக்கும், கட்சித் தாவலும், வெளிநடப்பும் 2 முக்கிய மற்றும் பெரும் சர்ச்சைக்குரிய மசோதாக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும்.

Related Link
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் விக்ரம்-1

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் விக்ரம்-1


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவில் Lava Virat V1 5G மற்றும் 4G ஸ்மார்ட்போன்கள்

0
4 mins agoshare
Lava Virat V1 5G








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau