news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் விக்ரம்-1
tv

Also Watch

tv

Read this

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் விக்ரம்-1

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. முதலில் 11:30 மணிக்கு ஏவத் திட்டமிட்ட நிலையில் தொழில் நுட்ப குறைபாட்டால் 12.05 மணிக்கு விண்ணேறி பாய்ந்தது. விக்ரம் 1 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஸ்கைரூட் குழுவினருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, பிரதமர் உற்சாகமூட்டினார்.

புதிய மைல் கல்லாக...
இந்​திய விண்​வெளி வரலாற்​றில், புதிய மைல்கல்​லாக, உள்​நாட்டு தனி​யார் நிறு​வனத்தால் முழுமை​யாக வடிவ​மைக்​கப்​பட்ட முதல் ஆர்பிட்​டல் வகை ராக்​கெட்​டான ‘விக்​ரம்​-1’ இன்று ஜூலை 18ஆம் தேதி, விண்ணில் வெற்றிகரமாக ஏவப்​பட்டது. ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள சதீஷ்தவான் விண்​வெளி மையத்​தின் முதலா​வது ஏவுதளத்​தில் இருந்து, வரலாற்று சிறப்​புமிக்க இந்த முயற்சி வெற்றிகரமாக மேற்​கொள்​ளப்​பட்டது. இன்று காலை 11.30 மணிக்கு விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலை காரணமாக 35 நிமிடம் தாமதமாக பகல் 12.05க்கு விண்ணில் ஏவப்பட்டது.

பிரதமர் மோடி வாழ்த்து
இந்த ராக்கெட் ஏவப்படுவதை மத்திய அறிவியல்-தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் பார்வையிட்டார். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, இந்த திட்டத்தில் தொடர்புடைய விஞ்ஞானிகளுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனமான ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ தயாரித்​துள்ள இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

முதன்முறையாக...
இந்​தி​ய தனி​யார் நிறு​வனம், சொந்தமாக உரு​வாக்​கிய ஏவு​தளத்தை பயன்​படுத்தி செயற்​கைக்​கோளை விண்​வெளி சுற்​றுப்​பாதை​யில் நிலை நிறுத்த முயற்​சிப்​பது இதுவே முதன்முறை. இந்த பயணத்​தின் நோக்​கம், செயற்​கைக்​கோளை மட்டும் விண்​ணில் செலுத்​து​வதல்ல. ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் விண்​வெளி பயணத்தின் போது எவ்​வாறு செயல்​படு​கின்றன? என்​பதை நேரடி​யாக மதிப்​பீடு செய்​து தரவு​களை சேகரிப்​பதே பிர​தான இலக்​காகும்.

350 கிலோ வரை எடை கொண்ட சிறிய மற்​றும் நடுத்தர அளவி​லான செயற்​கைக்​கோள்​களை 450 கிலோ மீட்டர் தூரத்​தில் பூமி​யின் தாழ்​வான சுற்​றுப்​பாதை​யில் நிலைநிறுத்​தும் வகை​யில்​ இந்​த ராக்​கெட்​ வடிவ​மைக்​கப்​பட்​டு உள்​ளது. ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ என்ற தனி​யார் நிறு​வனம் தயாரித்​து உள்ள இந்த பயணத்​துக்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிடப்​பட்​டு உள்​ளது.

Related Link
விண்வெளியில் கால் பதிக்கும் விக்ரம்-1

விண்வெளியில் கால் பதிக்கும் விக்ரம்-1

            

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, 3ல் 2 பெரும்பான்மைக்கு சதுரங்க வேட்டை

0
23 mins agoshare
நாடாளுமன்றத்தின் புதிய புள்ளிவிவர ஆட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau