news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்

ஆம்னி பேருந்துக்கு தனி பர்மிட்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
omni bus

மத்திய, மாநில அரசுகள் இணைந்து, ஆம்னி பேருந்துகளுக்கு தனி பர்மிட் வழங்கி, பாதுகாப்பு ஒழுங்குமுறை மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்த வேண்டும் என்று, ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்னி பேருந்துகளுக்கென தனி வகை பர்மிட் இல்லாததால், சுற்றுலாத் துறை பர்மிட்டை பயன்படுத்தி, பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். பேருந்து இயக்குவதிலும், விபத்து இன்சூரன்ஸ் கிளைம் செய்வதிலும் பிரச்சனைகள் உள்ளதாகவும், இத்துறையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் காப்பீடு தொகை பெற முடியாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தில், ஆம்னி பேருந்துகள், பல்வேறு மாநில விதிமுறைகள் மற்றும் வரி சிக்கல்களால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதற்கான நிரந்தர தீர்வாக மத்திய அரசு, ஆம்னி பேருந்துகளுக்கென தனித்துவமான அனுமதி (Permit) வழங்க வேண்டும் என்றும் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்கள் - ஆம்னி பேருந்துக்கு தனி பர்மிட்- உரிமையாளர் சங்கம் கோரிக்கை | Omni Bus | Omni Bus Owners Association

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவுக்கு ஆதரவு, திமுகவுடன் உறவு தொடரும் என சண்முகம் அதிரடி

6
2 hrs 15 mins agoshare
தவெகவுக்கு ஆதரவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved