Also Watch
Read this

2026-27ஆம் ஆண்டுக்கான, நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதியமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது;
நன்றி கடனுக்காக அரசியல் வருகை
நன்றிக்கடன் செலுத்துவதற்காக மட்டும் அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்
பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் முதலமைச்சர்
3 மாதங்களில் சொன்னதை செய்து காட்டியுள்ளது தவெக அரசு
விலையில்லா மின்சாரம் 200 யூனிட்களாக தவெக அரசில் உயர்த்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன
“சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ்”
கல்வி பெறுவதற்கு மாணவர்களின் நலன் அவசியம். அரசு பள்ளிகளில் தூய்மை பாதுகாப்பு சேவையை ஒருங்கிணைந்து மேற்கொள்ள சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம்
முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில், இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.139 கோடி ஒதுக்கீடு
ரூ.44,527 கோடி ஒதுக்கீடு
2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு

காமராஜர் சிறப்பு பள்ளிகள் திட்டம்
தரமான கல்வி வழங்க காமராஜர் சிறப்பு பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படும்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தமிழ்நாடு பட்ஜெட்டில் தாய் மாமன் தங்கமோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் அன்பளிப்பாக 1 கிராமில் தங்க மோதிரம் வழங்கப்படும்
வெற்றி மடிக்கணினி திட்டம்
கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு
அண்ணன் சீர் திட்டம்
அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு
பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும்

நவீனமயமாக்க ரூ.2,132 கோடி
அரசு பள்ளிகளை நவீனமயமாக்க ரூ.2,132 கோடி ஒதுக்கீடு
3,834 அரசு பள்ளிகளை நவீனமயமாக்கும் புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.300 கோடி ஒதுக்கீடு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved