Also Watch
Read this

அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புவதாக தம்பிதுரை கூறி உள்ளார். இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் என சூசகமாக தெரிவித்ததால் அரசியல் பரபரப்பு எழுந்துள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வருவார்
அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை கூறி இருப்பதாவது;
ஏராளமான ஆலோசனை நடைபெற்று வருகிறது. இப்போது என்னால் எதையும் உறுதியாக சொல்ல இயலாது. அனைத்தும் உரிய நேரத்தில் நடக்கும். நல்லதே நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனது கட்சி, எனது தலைவர் மீண்டும் ஆட்சிக்கு வருவார்.

திமுக உடன் கூட்டணியா?
மக்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவு அதிமுகவுக்கு இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எங்கள் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்திக்கும்போதெல்லாம், அவர்கள் தங்கள் உணர்வுப்பூர்வ ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்.

எனவே, கடவுளின் அருளால் அது உரிய காலத்தில் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதிமுக - திமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுவது குறித்து தலைவர்கள் சொல்வார்கள். தமிழகத்தில் நல்லாட்சி வரும். எங்கள் பொதுச்செயலாளர் நல்ல ஒரு ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு தம்பிதுரை கூறி உள்ளார்.