Also Watch
Read this
'Blast Blast' ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் பட்ஜெட் உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 2,500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லாத இளைஞர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி என முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சு விடாத பட்ஜெட் என்றும் கூறி உள்ளார்.

Remake Version budget
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் பற்றி ரீல்ஸ் முதல்வருக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'Blast Blast' ஆக இருக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும் படிதான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ரீ-மேக் வெர்சன் பட்ஜெட்.

புதிய தொலைநோக்கு திட்டங்கள்
பொதுமக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வு பிரச்சினை என்று, எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்

புஸ்வாண பட்ஜெட்
இதுமட்டுமல்ல, ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4 ஆயிரம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட். மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத சுரத்தில்லாத, புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்து உள்ளது.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved